Thursday, November 5, 2009

மார்கெட்டிங் மாமணிகளும் மணிகளும் ...

இந்த மார்கெட்டிங் மக்கள் சொல்லக்கூடிய பொய்கள் சிலது மக்களுக்கு புரியாமலே இருந்ததால் கடவுளை போய் சந்திந்து தங்கள் குறைகளை சொன்னனர் .
மக்கள் :சாமீ இந்த துணிக்கு வெளுக்கற சோப்பு விக்கறவன் கூட asf டெக்னாலஜி ,xyz சொல்யுசன் ன்னு எதாவது ஒன்னு சொல்லறான் அவன் பொய்தான் சொல்றன்னு நினைக்கிறோம் அவங்க பொய்சொல்றத நீங்க தான் நிறுத்தனும் சாமீ?!
கடவுள் :நான் பார்த்துக்கிறேன்
உடனே கடவுள் மார்கெட்டிங் ஆசாமிகள் அனைவரயும் அழைத்து நடந்ததை சொல்லி இனிமே பொய்யே சொல்ல கூடாதுன்னு சொன்னார் , மார்கெட்டிங் ஆசாமிகள் எங்க பொழப்பு செருப்பா சிரிச்சிடும் சாமீ இன்னாங்க சாமி உடனே நாளைக்கு ஒருநாள் நீங்க பொய்யே பேசாம இருந்தா இந்த உலகத்துல நீங்க எதை கேட்டலும் தருவேன் ன்னு சொன்னாரு ,சரி ஒரு நாள் தானே ன்னு ஒத்துகிட்டாங்க கடவுள் சொன்னாரு நான் எனக்கு பக்கத்துல ஒரு மணிய கட்டிருப்பேன் நீங்க யாராவது பொய் சொன்னா இந்த மணி அடிக்கும் நீங்க தோத்துட்டிங்க ன்னு அர்த்தம் ன்னாரு
நம்ம ஆளுங்களும் சரின்னு நாளைக்கே போட்டிய வெச்சுகலாம்ன்னாங்க
அடுத்த நாள் கலை எழு மணி : போட்டி ஆரம்பிச்சாச்சு
எட்டு மணி :மணி அடிக்கவில்லை
பத்து மணி :மணி அடிக்கவில்லை
சாயங்காலம் 5 மணி : மணி அடிக்கவில்லை
சாயங்காலம் 7 மணி : மணி அடிக்கவில்லை

நம்ம ஆளுங்க வேலைக்கே போகலையே அப்புறம் எப்படி மணி அடிக்கும் ? மார்கெட்டுக்கு போன தானே பொய் பேசணும் ,நாங்கதான் போகலையே ?
கடவுள் மணிய பார்த்தாரு ,மேலயிருந்து பூமிய பார்த்தாரு ,ஒரு வேல இவங்க ஜெய்ச்சிடுவங்கலோன்னு பயத்தோட உக்காந்துட்டு இருந்தாரு

இரவு எட்டுமணி :மணி நிக்காம அடிக்க ஆரம்பிச்சது

கடவுளுக்கே ஆச்சர்யம் என்னடா இதுன்னு ?! கீழ பூமிய பார்த்தாரு

நம்ம ஆளுங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தாக தெரியுமா ?

எல்லோரும் அவங்க கம்பெனிக்கு டெய்லி ஆக்டிவிட்டி ரிப்போர்ட் அனுப்பிகிட்டு இருந்தாங்க
என்னன்னு :

நான் இத்தன மணிக்கு இன்னார பார்த்தேன் ,எல்லா பொருளையும் நாளைக்கு வித்துடலமுன்னு பொய்யா..
கடவுள் மக்கள்கிட்ட சொன்னாரு இவங்கள திருத்த முடியாதுன்னு !


படிச்ச உங்களுக்கு சீக்கிரம் காப்பி பண்ணும் ஒரு சின்ன சாரி tera சாப்ட்வேர்
TERA COPY

1 comment:

  1. டெய்லி சேல்ஸ் / ஆக்டிவிடி ரிப்போர்ட் எழுதுபவர்கள் சேல்ஸ் மக்கள், மார்க்கெட்டிங் மக்கள் அல்ல. அடிப்படையில் மார்க்கெட்டிங், சேல்ஸ் ரெண்டும் வெவ்வேறு.
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete